நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதிகளை தனிமைப்படுத்தி வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமை;ககப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பணம் செலுத்த வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் கடந்த ஒன்றாம் தேதி முதல் வங்கியை மூடியது. மேலும் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வேறு கிளைகளை அணுகவும் பரிந்துரை செய்யப்பட்டது. கரோனா தொற்றுடைய நபர் சென்ற வங்கியை கடந்த ஒன்றாம் தேதி முதல் 28-ம் தேதி வரை தனிமைப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அதில் "கரோனா தொற்று உள்ளே நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு" எனவும் பெயர் என்னுமிடத்தில் "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்