நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா. பொட்டிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஏற்கனவே தம்பதிக்கு 6, 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கஸ்தூரி மீண்டும் கர்ப்பமானார்.
அதன்பின் கடந்த 4ஆம் தேதி அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தார்.
இந்நிலையில் கஸ்தூரி நேற்று (ஏப்ரல்.13) குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகே உள்ள இடுகாட்டில் புதைத்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசோக்குமார், திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளர் உமா பிரியதர்ஷினி, வருவாய் வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது காவல் துறையினர் பெண் குழந்தை என்பதால் தாய் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் தாயின்றித் தவிக்கும் 8 மாத குழந்தை: பிணை வழங்கிய நீதிமன்றம்