நாமக்கல் அடுத்த கொல்லிமலை, செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 'உலக பழங்குடியினர் தின விழா' நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்வழி செல்வராஜ் கலந்துகொண்டு 250 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் பழங்குடியினர் இனத்தைச்சேர்ந்தவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தோடர் இன பழங்குடி இன பெண்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அந்தப்பெண்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்தினார். அமைச்சர் பழங்குடி இனப் பெண்களுடன் சேர்ந்து நடனமாடிய நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க:காந்தியின் கனவு நனவாகும்வரை தியாகிகள் பாடுபட வேண்டும் - சுதந்திரப்போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி