ETV Bharat / state

கொல்லிமலையில் நாசமாகும் அரிய மூலிகைகள்!

நாமக்கல்: வறட்சியால் கொல்லிமலையில் ஏற்படும் காட்டுத் தீ மூலம் பல்வேறு அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின்றன.

கோப்புப்படம்
author img

By

Published : Apr 16, 2019, 12:05 PM IST

நாமக்கல்லில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. சித்தர்கள் பலர் கொல்லிமலையில் வாழ்ந்துவருவதாக இங்குள்ள பொதுமக்களால் நம்பப்படுகிறது.

இங்குள்ள மூலிகைகள் பல தீராத நோய்களுக்கு அருமருந்தாக விளங்குவதால் கொல்லிமலை "மூலிகைகளின் அரசி" என்று பெயர் பெற்றது.

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், நாமக்கல்லில் கடந்த சில வாரங்களாக வெப்பம் 100 டிகிரிக்கும் மேல் உள்ளது. இதனால் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கொல்லிமலை‌ ஆகிய பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

இதனால், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவிவருகிறது. இங்குள்ள மரங்கள் காய்ந்து சருகாக மாறிவிட்டது. இதன் காரணமாக மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது உராய்வின் காரணமாக காட்டுத் தீ எளிதில் பரவுகிறது.

இதில், அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின்றன. இதனால், மலை பாதையில் வாகன ஓட்டிகள் புகையின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விரைவில் காட்டுத் தீயை கட்டுக்குகள் கொண்டுவருவதன் மூலம் அரிய வகை மூலிகைகளைக் காக்க முடியும் என்கின்றனர் கொல்லிமலைவாசிகள்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 15

கொல்லிமலையில் காட்டு தீ பல அரிய மூலிகைகள் எரிந்து நாசம்

நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் கொல்லிமலை.  சித்தர்கள் பலர் கொல்லிமலையில் வாழ்ந்து வருவதாக இங்குள்ள பொதுமக்களிடையே நம்பப்படுகிறது. இங்குள்ள மூலிகைகள் பல தீராத நோய்களுக்கு அருமருந்தாக விளங்கப்படுவதால் கொல்லிமலையை "மூலிகைகளின் அரசி" என்று பெயர் பெற்றது.

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் நாமக்கல்லில் கடந்த சில வாரங்களாக  வெப்பம் 100 டிகிரிக்கு மேல் உள்ளது.  இதனால் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் கொல்லிமலை‌ ஆகிய பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. கொல்லிமலையில் மரங்கள் வறட்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக காட்டு தீ பரவிவருகிறது. இங்குள்ள மரங்கள் காய்ந்து சருகாக மாறிவிட்டது. இதன் காரணமாக மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஒராய்வின் காரணமாக காட்டு தீ எளிதில் பரவுகிறது.  இதனால் தீயினால் பல அரிய வகை மூலிகைகள் எரிந்து சாம்பலாகின. வனத்துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் திணறிவருகின்றன. இதனால் மலை பாதையில் வாகன ஓட்டிகள் புகையின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.      விரைவில் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அரிய வகை மூலிகைகளை காக்க முடியும் என்கின்றனர் கொல்லிமலை வாசிகள்.

Script in mail

Visual in ftp

File name : TN_NMK_03_15_KOLLIHILS_FIRE_VIS_7205944
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.