நாமக்கல் மாவட்டம் ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் ஊக்க தொகையை வழங்க வேண்டும், கடந்த ஓராண்டிற்கு மேலாக அங்கன்வாடிகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அங்கன்வாடி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பிறருக்கு பயன் தரும் பொருட்கள் குப்பையல்ல! மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!