ETV Bharat / state

'எங்கப்பா இருக்க என் தங்கமே!' - நாமக்கல் இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா! - ஒரு லட்ச ரூபாயில் ஆட்டோ வீடு

ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவில் வீடு ஒன்றை உருவாக்கிய நாமக்கல்லை சேர்ந்த இளைஞர் அருண்பிரபுவை மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.

mobile home on auto
ஆட்டோ வீடு
author img

By

Published : Mar 2, 2021, 1:06 PM IST

இந்திய தொழிலதிபர்களில் ஆனந்த் மகேந்திரா சற்று வித்தியாசமானவர். இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஏதேனும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினாலும் கூட அதனை ஊக்குவிக்கும் வகையில் தனது பாராட்டுகளை தெரிவிப்பார், ஆனந்த் மகேந்திரா.

சமீபத்தில் இளைஞர் ஒருவர் 1 லட்ச ரூபாய் மதிப்பில் ஆட்டோவிலேயே வீடு ஒன்றை உருவாக்கி இருப்பது அவரை அதிசயிக்க வைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த இளைஞர் அருண்பிரபு (24). சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் மிகுந்த இவர், கடந்த 2019ஆம்‌ ஆண்டு பயணிகள் ஏற்றும் மூன்று சக்கர ஆட்டோவில் சில மாற்றங்களை செய்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் ஆட்டோ வீடு ஒன்றை வடிவமைத்தார்.

அடங்கப்பா! இது தான் ஆட்டோ வீடா?

இந்த ஆட்டோ வீட்டில் சமயலறை, குளியலறை, படுக்கையறை போன்றவையும் ஆட்டோவின் மேல் சூரிய மின் உற்பத்தி தகடு ஆகியவை இடம் பெற்றிருந்தது. இவரது "ஆட்டோ வீடு" குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. ஓராண்டிற்கு பிறகு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, அருண் பிரபுவின் இத்தகைய ஆட்டோ வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.

சிறிய இடத்திலும் ஒரு வீட்டையே அமைக்கமுடியும் என சமூகத்திற்கு எடுத்துக்காட்டிய இளைஞர் அருண் பிரபுவின் படைப்பாற்றலை பாராட்ட வார்த்தைகளே இல்லை என ஆனந்த் மகேந்திரா பாராட்டியுள்ளார். தங்களது நிறுவனத்தின் பொலீரோ பிக்கப் வாகனத்திற்கு இதுபோன்று வடிவமைக்க முன்வருவாரா? எனவும், அவரது தொடர்பு‌ எண் இருந்தால் யாராவது தரமுடியுமா எனவும் ஆனந்த் மகேந்திரா கேட்டுள்ளார்.

  • Apparently Arun did this to demonstrate the power of small spaces. But he was also on to a larger trend: a potential post-pandemic wanderlust & desire to be ‘always mobile.’ I’d like to ask if he’ll design an even more ambitious space atop a Bolero pickup. Can someone connect us? https://t.co/5459FtzVrZ

    — anand mahindra (@anandmahindra) February 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்கு இந்திய அணியில் விளையாடிய வீரர்களுக்கு மகேந்திரா தோர் காரை ஆனந்த் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.