நாமக்கல் மாவட்டத்தில் நடந்துவரும் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் ஆய்வுசெய்தனர். இதில் நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "வருகின்ற 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கபிலர்மலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம்" என்றார்.
மேலும், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பதிலளிக்க முடியாது என்றார். பெட்ரோல், டீசல் உயர்வை குறைக்க மத்திய அரசிடம் அதிமுக தலைமை வலியுறுத்தும் என்றும் தங்கமணி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மட்டும் 69% இட ஒதுக்கீடு' - நீதிபதி யோசனை