மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் பொது மக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரி தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பின் சங்கங்களின் தலைவர் எஸ்.கே.வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.