ETV Bharat / state

பள்ளிவாசல் முன் பரப்புரை செய்த அதிமுக! - AIADMK

நாமக்கல்: அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் நகர அதிமுகவினர் கோட்டை பகுதியில் உள்ள திப்பு சுல்தான் ஜாமியா பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

AIADMK
author img

By

Published : Apr 6, 2019, 10:35 AM IST

தமிழகத்தில் மக்களவை-சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பரப்புரை செய்ய இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முன் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியில் வரும்போது நாமக்கல் மக்களவை அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்களிக்கும்படி அக்கட்சியினர் கையெடுத்துக் கும்பிட்டு வாக்கு சேகரித்தனர்.

மேலும் தமிழக அரசு சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களையும், அவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் என்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர் கூறினர்.

இதில் நாமக்கல் நகர அதிமுக நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாதிக் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 05

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் நகர அதிமுக சார்பில் கோட்டை பகுதியில் உள்ள திப்பு சுல்தான் ஜாமிஆ பள்ளி வாசலில் தீவிர வாக்கு சேகரித்தனர்

நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கோட்டை திப்பு சுல்தான் ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக நகர நிர்வாகிகள் சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு  ஆதரவாக பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தனர்.இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியில் வரும்போது தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கையெடுத்துக் கும்பிட்டு வாக்கு சேகரித்தனர். மேலும் தமிழக அரசு சிறுபான்மையினருக்கு அறிவித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் புனித பயணம் செல்வதற்கு உதவித்தொகை அளித்துள்ளது. ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு அரிசி வழங்கியுள்ளது. இந்த திட்டங்களை மனதில் வைத்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதில் நாமக்கல் நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தார்.

Script in mail

Visual in ftp

FILE NAME : TN_NMK_04_05_ADMK_ISLAMIAR_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.