நாமக்கல்: பொதுவாக தென்னை மரங்கள் உயர வளர்ந்தாலும் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும். ஆனால், பப்பாளி மரம் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்து விடும்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பழந்தின்னிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர், துரைசாமி. இவரின் வீட்டின் முன்பு தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். அதேபோல், பப்பாளி மரம் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வளர்த்துவரும் பப்பாளி மரம் ஒன்று, கடந்த 6 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள தென்னை மரங்கள் சுமார் 80 அடி முதல் 90 அடி வரையில் வளர்ந்துள்ளன. இந்த மரத்திற்கு இணையாக போட்டி, போட்டுக்கொண்டு பப்பாளி மரமும் வளர்ந்து வருகிறது. தென்னை மரத்துக்குப் போட்டியாக வளர்ந்துவரும் இந்த பப்பாளி மரத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
இதையும் படிங்க: தென்காசி அச்சன்கோவிலில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு