ETV Bharat / state

8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர்

நாமக்கல்: கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 3.5 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Namakkal
author img

By

Published : Apr 1, 2019, 11:42 AM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில்,தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி, பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்களுடன் மட்டுமே பொருட்கள், பணத்தை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் உரிய ஆவணங்களின்றி பணம், பொருட்கள் எடுத்துச்செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநரிடம் விசாரணை செய்ததில், தாங்கள் ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தங்க நகைகளைசேலத்திலிருந்து மதுரைக்கு எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தனர். வேனையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்,விரிவான விசாரணைக்குப் பிறகேதங்க நகைகள்மீண்டும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

கடந்த வாரம் இதே பார்சல் நிறுவனத்தினர்நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைஎடுத்து வந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Intro:நாமக்கல் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் 3.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

Body:தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் உரிய ஆவணங்களுடன் மட்டுமே பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பல இடங்களில் உரிய ஆவணங்கள்இன்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச்செல்வது வாடிக்கையாகிவிட்டது.

நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுனரிடம் விசாரணை செய்ததில் இந்த தங்கநகைகள் சேலத்திலிருந்து மதுரைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் தாங்கள் ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு பிறகே இந்த தங்கத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

Conclusion:கடந்த வாரம் இதே பார்சல் நிறுவனம் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் எடுத்து வரும்போது தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கி கொண்டனர். தற்போது மீண்டும் சிக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.