தமிழ்நாட்டில் கரோனாவை தொடர்ந்த கறுப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பெண்கள் உட்பட 7 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவருக்கு தொற்று தீவிரமடைந்ததால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இருவருக்கு தொற்று தீவிரமடைந்து வருவதால் அவர்களை மதுரை அல்லது சென்னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பயோலாஜிக்கல் இ தடுப்பூசி - 30 கோடி டோஸ் முன்பதிவு