நாமக்கல்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 8) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி மினி மாராத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கன் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.19 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் நான்கு பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.5.15 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 100 விழுக்காடு வாக்குப்பதிவு- பெரம்பலூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு