ETV Bharat / state

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் 2ஆவது கணவர்!

நாமக்கல்: 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் 2 ஆவது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் 2ஆவது கணவர் - சிறுமி புகார்

author img

By

Published : Sep 8, 2020, 9:29 PM IST

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயின் 2 ஆவது கணவர் பரமநாதன் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.

இச்சிறுமி தனது பாட்டி மற்றும் உறவினருடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், “கடந்த ஜீலை 17ஆம் தேதி தனது தாய் வேலைக்கு சென்று விட்ட பிறகு மதியம் வீட்டிற்கு வந்த பரமநாதன் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

பின்னர் இதுகுறித்து தனது தாயிடம் கூறியபோது பரமநாதன் தங்களை அடித்து துன்புறுத்தி மிரட்டிய நிலையில் தனது தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.

தற்போது அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே பரமநாதன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.