ETV Bharat / state

நாமக்கல்லில் 24 மாதிரி குளிர்சாதன வாக்குப்பதிவு மையங்கள் - ஆட்சியர் தகவல்! - நாமக்கல் அண்மைச் செய்திகள்

நாமக்கல்: நூறு விழுக்காடு வாக்களிப்பை ஊக்குவிப்பதற்காக 24 மாதிரி குளிர்சாதன வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குளிர்சாதன வசதியுடன் அலங்கரிக்கப்பட்ட வாக்குப்பதிவு மையம்

author img

By

Published : Apr 5, 2021, 6:34 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தலா நான்கு வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 24 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு மாதிரி வாக்குச் சாவடி மையத்தின் முகப்பிலும் அலங்கார வளைவு, தரையில் கம்பளங்கள் விரிப்பு என விமரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுடன் அலங்கரிக்கப்பட்ட வாக்குப்பதிவு மையம்

இதுகுறித்து ஆட்சியர் மெகராஜ் கூறுகையில், “மக்களிடம் நூறு விழுக்காடு வாக்களிப்பை ஊக்குவிக்கும் விதத்திலேயே, குளிர்சாதன வசதியுடன் கூடிய மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் நண்பர்கள் வீடுகளில் சோதனை: ரூ.35 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.