நாமக்கல் மாவட்டம் இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூவில் வசித்து வருபவர் தொழிலதிபர் பொற்கோ. இவர் தனது தந்தைக்கு இறதி சடங்குகள் செய்வதற்காக மனைவி, இரு மகள்களுடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அறைக்குள் வைத்திருந்த சுமார் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதன் பின் நாமக்கல் காவல் நிலையத்திற்கு பொற்கோ அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.