ETV Bharat / state

பொதுத்தேர்வு: தயார் நிலையில் தேர்வு மையங்கள்! - கரோனா பரவல்

நாமக்கல்:  மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 21,305 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாகவும், இதற்காக 308 தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும்  மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவல் கூட்டம்
author img

By

Published : Jun 5, 2020, 9:04 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மேல்நிலை, இடைநிலை பொதுத்தேர்வுகள் குறித்த மாவட்ட தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் "மாவட்டத்தில் 21 ஆயிரத்து 305 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். ஏற்கனவே 90 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 218 தேர்வு மையங்கள் என மொத்தம் 308 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டம்

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டு மாணவர்களின் இல்லங்கள் அருகிலேயே தேர்வு மையம் உள்ளது போல அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் தேர்வு கூட நுழைவுச் சீட்டை அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். வெளி மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வருவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.

ஆட்சியர் அலுவல் கூட்டம்
ஆட்சியர் அலுவல் கூட்டம்

அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்வு கூட அனுமதி சீட்டு வாங்க வரும் மாணவர்களுக்கு முகக்கவசமும் அளிக்கப்படும். காலை 10:15க்கு தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்காக அரசு போக்குவரத்து கழகம், பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றாலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 30 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.