இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோதே கோழி பண்ணை தொழில் பாதிப்புக்குள்ளாக தொடங்கி விட்டது, கரோனாவால் கடந்த 4 மாதங்களில் 560 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிப் பண்ணை தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்.
நான்கு விழுக்காடு வட்டியில் வங்கிகளில் கடன் கிடைக்க வழிவகை செய்வதோடு குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்றிட வேண்டும். கோழி தீவன மூலப் பொருள்களான சோயா, புண்ணாக்கு, தவிடு போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, ஏற்கனவே கட்டியுள்ள ஜி.எஸ்.டி வரிப்பணத்தை அரசு திருப்பி தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ரூ.350 கோடி பாதிப்பு!