நாமக்கல் : தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், சுஜாதா, கோகுலகிருஷ்ணன், விஜயன் ஆகியோர் கொண்ட, 2 அமர்வுகள் வழக்குகளை விசாரித்தனர்.
இதில் சாலை விபத்து , தொழிலாளர் பிரச்சனை, உரிமையியல் வழக்கு , கல்வி கடன், தனிநபர் கடன், காசோலை தொடர்பான 200க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர்களையும் விசாரித்த நீதிபதிகள், சமரசம் செய்து வழக்குகளை முடித்து வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான நிவாரணமும் பெற்று கொடுத்தனர்.
இதையும் படிங்க : சாலையில் கிடந்த கரோனா பரிசோதனை குப்பிகள்: தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்!