ETV Bharat / state

இரவில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்: உறுதிமொழி எடுக்கவைத்த போலீஸ் - youngsters playing cricket arrested by police in nagai

நாகப்பட்டினம்: இரவு வேளையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்துவந்து காவல்துறையினர் உறுதிமொழி எடுக்கவைத்து புத்திமதி கூறினர்.

youngsters playing cricket arrested and made to take oath by police in nagai

author img

By

Published : Apr 26, 2020, 12:55 PM IST

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் அனாவசியமாக சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு காவல் துறையினர் எவ்வளவு அறிவுரைகளைக் கூறி எச்சரித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் செயல்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் ஊர்சுற்றும் இளைஞர்களை வளைத்துப் பிடிக்க காவல் துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து நாகை கண்ணார தெருவைச் சேர்ந்த 11 இளைஞர்கள் அப்பகுதியில் இரவு வேளையில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது அரசின் உத்தரவை அலட்சியப்படுத்திய அந்த இளைஞர்களை சுற்றி வளைத்த காவல் துறையினர், அவர்களை கைது செய்து நாகை நகர காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பிடிபட்ட இளைஞர்களை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் முன்னிலையில், ஊரடங்கு உத்தரவை மீறமாட்டோம் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்கச் செய்தனர்.

இளைஞர்களை உறுதிமொழி எடுக்கவைத்த போலீஸ்

இதையும் படிங்க... கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை தெறிக்கவிட்ட காவல் துறை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.