ETV Bharat / state

டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி - mayiladudurai youth dead by electric shock

மயிலாடுதுறை அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

author img

By

Published : Jun 21, 2021, 7:12 PM IST

மயிலாடுதுறை: மணல்மேடு காவல் சரகத்திற்குள்பட்ட வடவஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (30). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இவரது திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர்.

கலையரசன் சற்று மனநிலை பாதித்து இருந்ததாகவும், வீட்டு வாசலில் நின்று கொண்டு ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜுன்.20) வீட்டில் சமையல்‌ கேஸ் சிலிண்டரை பற்றவைத்து தற்கொலை செய்ய முயன்றவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன்.20) மீண்டும் கலையரசன் அவருடைய வீட்டருகே உள்ள டிரான்பார்மரில் ஏறியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் மையங்களில் கொள்ளை - இளைஞர்களுக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.