ETV Bharat / state

குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் - வேளாண் இணை இயக்குநர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் குறித்து பொன்னூர் கிராமத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர்

author img

By

Published : Jul 19, 2023, 2:08 PM IST

குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர்

மயிலாடுதுறை: காவிரி டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகள் ஏப்ரல் மாத இறுதியில் விதை விட்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்து உள்ளனர். முன்பட்ட சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள், தற்போது நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 50, ஏஎஸ்டி 16 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.

பம்பு செட் நீரைக் கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பயிர்களின் தோகைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி வருவதோடு, வயல்களில் பயிர்களை பார்த்தால் நெற்பயிர்கள் முற்றி பழுத்து இருப்பதுபோல் வெளிர் மஞ்சளாக தோற்றம் அளிக்கிறது.

குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்டு உருளும் பருவத்தில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாலை நேரங்களில் காற்று பலமாக வீசுவதால் குறுவை நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் பரவத் தொடங்கி உள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்தினை பயிர்களுக்கு தெளித்தாலும் மஞ்சள் நோய் கட்டுப்படுவதில்லை.

இதனால், பயிரை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் விவசாயத்திற்காக செய்யும் செலவுகள் விலைவாசி உயர்வு காரணமாக அதிகரித்து உள்ள நிலையில், இந்த பூச்சி மருந்தினையும் அடிக்க வேண்டி உள்ளதால், செலவு மேலும் அதிகரிக்கும் என்பதால் அரசு மஞ்சள் நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வேளாண் துறை மூலம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் தலைமையில் பொன்னூர், ஆனந்தங்குடி பகுதிகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மஞ்சள் நோய் தாக்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர் கூறுகையில், “ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5 உள்ளிட்ட சில ரகங்களில் குறுத்துப் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. சில விவசாயிகள் வேளாண்மைத் துறையினரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த கள அலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்டப் பயிர்களை ஆய்வு செய்து உரிய மருந்துகளை பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாயிகள், வேளாண்மைத் துறையினர் பரிந்துரைக்கும் மருந்துகளை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். மேலும், மயிலாடுதுறை வட்டாரத்திற்கு நியமிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி இன்று (ஜூலை 19) பாதிக்கப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்து பூச்சி தாக்குதலுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்தி தருவார்” என கூறினார்.

இதையும் படிங்க: உள் இடஒதுக்கீட்டை விரைந்து வழங்குக - பாட்டாளி மக்கள் கட்சி விழாவில் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.