ETV Bharat / state

மயிலாடுதுறையில் திருக்குறள்களை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் வரைந்து இளைஞர் உலக சாதனை - Burning Wood Art

Thirukkural achievements: சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலையில், திருக்குறளை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறையில் திருக்குறள்களை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் வரைந்து இளைஞர் உலக சாதனை
விக்னேஷ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:18 AM IST

சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட்

மயிலாடுதுறை: சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலையில், ஒரு மணி நேரத்தில் 70 வார்த்தைகள் 577 எழுத்துக்கள் கொண்ட பத்து திருக்குறளை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து மயிலாடுதுறையைச் சார்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர், விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் “சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட்”என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் அரங்கேற்றி வருகிறார். மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களை ஒரே இடத்தில் குவித்து, அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும்.

இதன்படி, இளைஞர் விக்னேஷ் ஏற்கனவே காந்தி, விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, சந்திராயன் 3 விண்கலம், டெஸ்லா, கடல் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோ, கடவுள் படங்கள், பெரியார், திருவள்ளுவர், சினிமா பிரபலங்களான விஜய், அஜித், தனுஷ், சிம்பு படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி" - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில், நேற்று (அக்.06) மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் ஆலயத்தில் ஒரு மணி நேரத்தில், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற திருக்குறளில் தொடங்கி, 10 திருக்குறளை அதாவது, அதில் உள்ள 70 வார்த்தைகள் 577 எழுத்துக்களை சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும், இதற்காக கடுமையான வெயிலில் லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களை குவித்து பொறுமையாக ஓவியம் வரைந்தார். அதனைத் தொடர்ந்து, ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற அமைப்பு, இதனை உலக சாதனையாக அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டியது.

இந்நிலையில், சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலை மூலமாக சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து விக்னேஷின் சாதனையை ஏராளமான பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் 80 விழுக்காடு வேலை தமிழருக்கே என சட்டம் இயற்ற வேண்டும்’ - அன்புமணி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.