ETV Bharat / state

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையில் தொல்லியல்துறை சார்பில் உலக மரபு வார விழா! - Tharangambadi Danish Fort

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையில் தொல்லியல்துறை சார்பில் உலக மரபு வார விழா நடைபெற்றது. இதை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

World Heritage Week
World Heritage Week
author img

By

Published : Nov 23, 2021, 10:27 PM IST

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் புகழ்பெற்ற டேனிஷ்கோட்டை அமைந்துள்ளது. இங்கு தொல்லியல்துறை சார்பில் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உலக மரபு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த பழமையான பொருள்கள், பண்டைய நாணயங்கள் போர்க்கருவிகள், முதுமக்கள் தாழி, கடவுள் சிலைகள், போர் வீரர்கள் பயன்படுத்திய உடைகள், உள்ளிட்ட பழமையான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலக மரபு வார விழாவை முன்னிட்டு ஒருவாரம் கோட்டையை கானவரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல், கல்வெட்டியல் குறித்து அறிந்துகொள்வதோடு பாதுகாக்கப்பட்டுவரும் புராதன பொருள்கள் பண்டைய கால வரலாறு நாகரிகம் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் கோட்டையை பார்வையிட்டு வருகின்றனர்.

உலக மரபு வார விழாவையொட்டி தொல்லியல்துறை சார்பில் பொறையார் TBML கல்லூரியில் கீழடி அகழாய்வு குறித்து மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து டேனிஷ்கோட்டையில் தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம், பம்பை, ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைச் சுற்றுலாப் பயனிகள் கண்டு ரசித்தனர், மேலும் தொல்லியல், கல்வெட்டியல் குறித்து பல பள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : மம்தா கட்சியில் ஐக்கியமான முன்னாள் ஐக்கிய ஜனதாதளம் எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.