உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில், உணவு முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்து பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
இதில் ராகி புட்டு, திணை, கம்பு வகை கொழுக்கட்டைகள், மாப்பிள்ளை சம்பா, அரிசி முறுக்கு, பொரி உருண்டை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், தேன்குழல், முறுக்கு, வெல்ல அதிரசம், பாசி பருப்பு உருண்டை, ரவா உருண்டை, கைமுறுக்கு, முளைகட்டிய பயிர்கள் என பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
அதனைத் தொடர்ந்து, 'துரித உணவைத் தவிர்ப்போம், இயற்கை உணவுமுறைக்கு நம் சந்ததியினரை அழைத்துச் செல்வோம்' என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், உணவு பாதுகாப்புத் துறையினர், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.