நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனையில் பிரசவித்த பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் 70 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சத்துமாவு, பிரட், பிஸ்கெட், ரஸ்க் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
மேலும் குழந்தை வளர்ப்பு குறித்தும், தாய்ப்பாலின் மருத்துவ குணங்கள் குறித்தும் தாய்மார்களுக்கு மருத்துவர்கள் அறிவுரைகள் வழங்கினர். இதில் அரசு மருத்துவமனை குழந்தை மருத்துவர் பாலாஜி மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.