நாகையில் கடந்த 9ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய கூலித் தொழிலாளி பெண் ஒருவரை, வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் அங்குள்ள கோயிலில் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வன்புணர்வுசெய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று (ஜன. 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது வன்புணர்வு செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் துறை பாதுகாப்பு அளித்து அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கவுன்சிலிங் கொடுத்து உயர் சிகிச்சை அளித்திட வேண்டும் எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க... ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ரயில்வே ஊழியர்கள்!