நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நாராயணசாவடியைச் சேர்ந்த முத்துமாணிக்கத்தின் மகன் ஆட்டோ ஓட்டுநர் தீபக் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலையூரைச் சேர்ந்த மாரியம்மாள் மகள் ஜெயப்பிரியா என்பவருக்கும் 15 மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தின்போது 10 பவுன் நகை வரதட்சணையாக வழங்குவதாகக் கூறிய பெண் வீட்டார், 8 பவுன் நகையும் சீர்வரிசையும் அளித்துள்ளனர். தீபக் ஒன்றரை பவுன் நகை போடவில்லை என்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு துன்புறுத்தி வந்ததால் நேற்று ஜெயப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டர்.
இந்த தகவலால் அதிர்ச்சியடைந்து வந்த மாரியம்மாளும் அவர்களது உறவினர்களும் ஜெயப்பிரியாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி அவர்களும் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.