ETV Bharat / state

வீட்டில் சாராயம் விற்பனை செய்த பெண் கைது! - மதுவிலக்கு காவல்துறை

நாகை: காரைக்கால் அருகே வீட்டில் சாராயத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

woman-arrested-for-selling-liquor-at-home

author img

By

Published : Feb 7, 2021, 7:57 AM IST

காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்தி வரப்பட்டு, வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சந்தேகத்தில் பேரில் நாகை அடுத்துள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரது வீட்டில் காவல்துறையினர் நேற்று (பிப்.06) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் சாராய மூட்டைகள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சாராயம், பாக்கெட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்த நாகை மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் வீட்டில் சாராய பாக்கெட் போட்டு விற்பனை செய்துவந்த செல்லூர் வீரலட்சுமியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கணவர் மீது பெண் ஐபிஎஸ் அலுவலர் வரதட்சணை புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.