மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு (நவ.10) முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மாவட்டத்தில் மொத்தமாக 241.70 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் வெளிப்பிரகாரங்கள் மற்றும் சந்நிதி தெருவில் தண்ணீர் தேங்கி மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நகராட்சி 23ஆவது வார்டு கவுன்சிலர் சதீஷ் என்பவர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழைநீர் வடிகால் அடைப்புகளையும் குப்பைகளையும் தன் கைகளாலேயே அள்ளி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம்