ETV Bharat / state

"மக்களை அழிக்கும் பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்" - வெகுண்டெழுந்த வேல்முருகன்! - hydro corban

நாகை: மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வள பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

velmurugan
author img

By

Published : Aug 18, 2019, 9:13 PM IST

நாகை அருகே மீத்தேன் எதிர்ப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், இயற்கை மற்றும் கனிம வளம் பாதுகாப்பு மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.

மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட்டு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அணு உலை திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் கூறினார்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - வேல்முருகன்

அதேபோல், காஷ்மீர் பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்குச் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்

Intro:மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் இயற்கை வளம் கனிம வள பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன் ஷேல் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் நியூட்ரினோ திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும். காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் கருப்பு பணம், வெள்ளை பணம் பெறுகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவே அரசுகளுடன் இணக்கமாக உள்ளார். அவரின் முகமூடி தமிழக மக்களிடையே இப்போது வெளிவந்துள்ளது தமிழக மக்கள் தான் அவரைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பேட்டி:- வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.