நாகப்பட்டினம்: வேளாளர் சமூகத்தின் பெயரை மற்ற சமூகத்தினருக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறக்கோரி, அனைத்து வேளாளர் சமுதாயத்தினர் மயிலாடுதுறையில் கண்டன பேரணி நடத்த அறிவித்திருந்தனர்.
இப்பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தநிலையில், சைவ வேளாளர் சங்கம், கார்காத்த வேளாளர் சங்கம், சோழிய வேளாளர் சங்கம் உள்ளிட்ட சமுதாயத்தினரின் சமூகப் பிரதிநிதிகள் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சைவ சங்க வேளாளர் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பண்ணை சொக்கலிங்கம் கூறுகையில், 'வேளாளர் என்ற சொல்லை தேவேந்திரகுல வேளாளருக்கு அறிவிப்பதாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து, மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்குத் தான் வருகின்ற தேர்தலில் வாக்களிப்போம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '18 பக்க சட்டத்திற்கு 19 பக்கத்தில் திருத்தம் செய்த ஓரே அரசு மோடி அரசு'