உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழா இந்தாண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தொடங்கும் இவ்விழாவில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டு பக்தர்களின்றி பாதிரியார்கள் மட்டுமே பங்குபெற உள்ளனர்.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் பேசுகையில், "வரும் 29ஆம் தேதி பேராலயத்தில் கொடியேற்றம், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி பெரிய தேர் பவனி, மாதா பிறந்த தினமான 8ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு திருப்பலி, கொடி இறக்கும் நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் பக்தர்களின்றி நடைபெற உள்ளன.
கொடியேற்றம், பெரிய தேர் பவனி நிகழ்ச்சிகளில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், வேளாங்கண்ணியில் உள்ள மீனவ பிரதிநிதிகள், பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ இல்லனா என்ன, ’குக் ஃப்ரம் ஆஃபிஸ்’ இருக்கு! - ஊழியர்களின் நலன் காக்கும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி!