மயிலாடுதுறையில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் வேத சிவாகம வேதாரப் பாடசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து 21ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் இவ்விழாவில் முன்னிலை வகித்தார். இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆர். சுப்பிரமணியன், வி. சிவஞானம் ஆகியோர் பங்கேற்று தேவாரப் பாடசாலை, தங்கும் விடுதி, பாடசாலை குடில்களைத் திறந்துவைத்தனர்.
இதில், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57ஆவது குருமகா சந்நிதானம், தேவாரப் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தவறான அறுவை சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக முற்றுகை போராட்டம்!