நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நடிகைகள், சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைத்த மத்திய அரசைக் கண்டித்தும், ஐஐடி மாணவி பாத்திமா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.