இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, "பாஜக நடத்தும் வேல் யாத்திரையை ஆதரித்து கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியை (அனுமன் சேவை அமைப்பு) சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் விசிக தலைவர் திருமாவளவனை ஒருமையில் அவதூறாக பேசினார்.
திருமாவளவனை விமர்சித்து பேசிய ஸ்ரீதர் மீது கொலை முயற்சி, சாதியை இழிவுபடுத்துதல், சாதி மோதலை உருவாக்குதல், சாதி ரீதியாக நாட்டை பிளவுபடுத்துதல் போன்ற வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக விசிகவினர் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கோரிக்கை!