கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு குறித்து பேசாமல் தவிர்த்ததை ராகுல் காந்தி வன்மையாக கண்டித்தார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "நாடு முழுவதும் நீட் மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது கண்டனத்திற்குறியது. இதனை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்திடவும், இதை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திட வேண்டுமென கோரி விசிக கட்சியின் முற்போக்கு மாணவர்கள் கழகத்தின் சார்பில் இன்று (ஆக.31) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதபோன்று, மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முற்போக்கு மாணவர்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் மாநில அரசு, நீட் தேர்வு குறித்து ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. தமிழநாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினம்தோறும் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கிறது. நாள்தோறும் மூவாயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியத்தில் விதை நெல் விவசாய இடு பொருள்களை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அத்தப்பூ கோலமிட்டு சேலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!