நாகை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியை நடத்துபவர்கள் கனிமவள விதிகளுக்கு எதிராக அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக மண் அள்ளுவதாக கூறப்படுகிறது.
இதனால் நெப்பத்தூர் கிராமத்தை சுற்றி நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குடிநீர் தட்டுப்பாடும் விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் சவுடு மண் குவாரியை மூடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து கிராம மக்கள் குவாரி முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணமாக இருக்கும் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் குவாரி நிர்வாகத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நீதி பெற்று தருவோம் என்று வருவாய்துறையினர் கூறிய பிறகு பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவி்ட்டனர்.
இதையும் படிங்க: கூடங்குளம் திட்டக்குழுமத்தின் ஒப்புதலின்றி இயங்கும் கல் குவாரி: நீதிமன்றம் கேள்வி