ETV Bharat / state

நாகூர் கந்தூரி விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் - நாகூர் வணிகர் சங்கத்தினர் மனு..! - TN Governor RN Ravi

Nagore Kanduri festival: நாகூர் கந்தூரி விழாவிற்கு ஆளுநர் ஆர்.என் ரவி வருகை தருவதால், சட்டம் ஒழுங்கு மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் அவரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற, விசிக மற்றும் வணிகர் சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

நாகூர் வணிகர் சங்கத்தினர்
நாகூர் வணிகர் சங்கத்தினர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 4:39 PM IST

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 10 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம் பேதமின்றி பங்கேற்பார்கள். அதேபோல், இந்த ஆண்டு நாகூர் தர்காவின் 467வது கந்தூரி விழா, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியோடு துவங்கியது.

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இரவு நாகூர் ஆண்டவர் தர்காவின் 5 மினாராக்களில் கொடியேற்றப்பட்டு, கந்தூரி விழா கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக வரும் 23 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நாகூருக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நாகூரைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய நிகழ்ச்சியான நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டால் மத ரீதியான கலவரங்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதே போல் கந்தூரி விழாவிற்கு ஆளுநர் வந்தால் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்குக் கெடுபிடி ஏற்படும், அதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக்கூறி, சிறப்பு விருந்தினரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும், இதே கோரிக்கைகளை முன்வைத்து நாகூர் தர்கா சாகிபு மார்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதன் இடையே நாகூர் தர்ஹா பரம்பரை ஆதினஸ்தர்கள் சார்பில் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு வருகை தருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் தமிழக அமைச்சர்களான செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வழிக்கரையான் வேடத்தில் வந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.