மயிலாடுதுறை மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் புதாஅருள்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “வன்னியர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. அவற்றை மீட்க வாரியம் அமைக்க நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடினோம். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் செயல்பாடற்ற வாரியமாக உள்ளது.
மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும், சாதிவாரி கணக்கெடுத்து அதற்குத் தகுந்தாற்போல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
ஒரு சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையை தவறாகப் பயன்படுத்தி உள்ளாட்சியில் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதை அலுவலர்கள் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மயிலாடுதுறையில் வன்னிய நல வாரியத்திற்குள்பட்ட 10 ஆயிரம் சதுர அடி இடத்தை பாமக கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், “அந்த இடம் தனிப்பட்ட எந்த அமைப்பினருக்கும் சொந்தமல்ல, அனைத்து வன்னியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறினார்.
இதையும் படிங்க: முன்னாள் எம்எல்ஏ திருவுருவப்படத்தை திறந்துவைத்த ஸ்டாலின்