மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட தையல் நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு தங்கத் தகடுகள் பதிக்கும் திருப்பணிக்கு தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் காணிக்கையாக ஐந்து கிலோ தங்கம் வழங்கப்பட்டது.
தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று (செப்டம்பர் 8) குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம்வந்து கொடிமரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு!