ETV Bharat / state

நெல்லின் ஈரப்பதம் 24.5% வரை உள்ளது - மயிலாடுதுறை ஆட்சியர்

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக நடைபெற்ற மத்திய குழுவின் ஆய்வின்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 19 சதவீதம் முதல் 24.5 சதவீதம் வரை நெல் ஈரப்பதமாக இருந்தததாக அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

நெல்லின் ஈரப்பதம் 24.5% வரை உள்ளது - மயிலாடுதுறை ஆட்சியர்!

author img

By

Published : Feb 9, 2023, 7:12 AM IST

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேட்டி

மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாரான பயிர்கள் சேதமடைந்த காரணத்தால், ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று (பிப்.8) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,71,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் சுமார் 35,000 ஏக்கர் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள், பருவம் தவறி பெய்த கனமழையால் நீரில் மூழ்கியுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 32,535 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 1,22,000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்தியக் குழு ஆய்வின்போது, நெல்லின் ஈரப்பதம் 19 சதவீதம் முதல் 24.5 சதவீதம் வரை இருந்தது. தற்போதைய ஆய்வு சோதனைக்குப் பிறகு அரசிடம் அறிக்கை தரப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு களஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நியாயமான வாடகைக்கு அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை தேவை - விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.