தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் 'எல்லாரும் நம்முடன்' போன்ற பரப்புரை திட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாள்கள் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது பரப்புரையை தொடங்கவுள்ளார்.
முதல்கட்டமாக நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு இந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும்!