நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் கிடங்குகளில் அடுக்கி வைத்துள்ளனர்.
அந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு விநியோகத்திற்கு வழங்கி வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுக்காகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூடைகள் ஆங்காங்கே கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அவற்றை அரசு மற்றும் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லுக்கு இரண்டாயிரம் டன் நெல்மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 42 சரக்கு வேன்கள், 105 லாரிகள் மூலம் நெல்மூடைகளை கொண்டுசென்று சரக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.