ETV Bharat / state

கொஞ்சிக் குலாவிய யானைகள் - மாயூரநாதர் கோயிலில் கண்ட வியத்தகு காட்சி!

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சந்தித்ததால் கொஞ்சிக் குலாவிய யானைகளின் காட்சி பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொஞ்சிக் குலாவிய யானைகள் - மாயூரநாதர் கோயிலில் கண்ட வியத்தகு காட்சி

author img

By

Published : Mar 21, 2023, 8:57 PM IST

கொஞ்சிக் குலாவிய யானைகள் - மாயூரநாதர் கோயிலில் கண்ட வியத்தகு காட்சி

மயிலாடுதுறை: "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" என்ற கம்ப ராமாயணத்தின் வரிகளுக்கு காட்சியமைத்தது போல இருந்தது, இன்று (21.03.2023) மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் கண்ட காட்சி. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில், குமரக்கட்டளை ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாகிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் கும்பாபிஷேகத்திற்காக நடைபெறும் யாக சாலை பூஜையின் போது, யானைகள் காட்டிய பாசப் பிணைப்பு, பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

யாக சாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யானைகளின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாயூரநாதர் அபயாம்பிகை யானை, திருவையாறு ஐயாரப்பர் கோயில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி ஆகிய மூன்று யானைகள் மீது புனித குடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, மாயூரநாதர் ஆலயத்திற்கு வந்தடைந்தன.

புனித குடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர், அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு, புத்துணர்வு மறுவாழ்வு முகாமில் சந்தித்துக் கொண்ட இந்த யானைகள் இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும், துதிக்கையால் பிணைந்தும், ஆரத்தழுவி முத்தமிட்டு, மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டன.

மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு யானை பிளிறு முழக்கமிட்டது. தொடர்ந்து யானை பாகன்கள் இரண்டு யானைகளை பிரிக்க முயற்சித்தும் அடம் பிடித்த யானைகள் கொஞ்சி குலாவின. பின்னர் யானைகளுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்க யானை பாகன்கள் குழாயில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போதும் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கு அடம் பிடிப்பது போன்று யானைகள் பிரிய மறுத்தன. இதனை கோயிலில் இருந்த பக்தர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் பத்துக்கும் மேற்பட்ட மல்லாரி மேளக் கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வேத சிவாகம பாடசாலை சிறுவர்கள் தேவாரப் பாடல்கள் பாடியே பின் தொடர்ந்தனர். ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை தருமபுர ஆதீன கட்டளை மடத்தின் வாசலில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மலர் தூவி புனித கடங்களை வரவேற்றார். யாக சாலை பூஜையின் நடுவே யானைகளின் பாசப் பிணைப்பு பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

இதையும் படிங்க: இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை - விவசாயிகள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.