நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் அதிகளவில் கள்ளச்சாராயம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மயிலாடுதுறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையில் பட்டமங்கலம் புதுத் தெருவைச் சேர்ந்த குதிரைவண்டி குமார் என்ற கள்ளச்சாராய வியாபாரியின் தோட்டத்தில் மண்ணில் புதைத்துவைக்கப்பட்ட 35 லிட்டர் கள்ளச்சாராயம் அடங்கிய 11 கேன்கள் சிக்கின. அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் அதுதொடர்பாக இருவரை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் கள்ளச் சாராய கடத்தல்கள்; 810 லிட்டர் பிடிபட்டது!