ETV Bharat / state

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது! - nagai district news

மயிலாடுதுறையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 256 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
author img

By

Published : Aug 8, 2021, 11:31 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி, செம்பனார்கோவில் பகுதிகளில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. அண்மையில், செம்பனார்கோவில், விளநகரில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது. அதில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மயிலாடுதுறை கல்லறை தோப்புத் தெருவைச் சேர்ந்த மருது (எ) விஜயபாஸ்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகம் (44) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், செம்பனார்கோவில் பகுதி கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

அவர்களிடமிருந்து, 256 கிராம் தங்க நகைகள், ஒன்றரை கிலோ எடை கொண்ட இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அதையடுத்து அவர்கள், இருவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவங்களில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவந்ததையடுத்து அவர்களைத் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆடி அமாவாசை - மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கக் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.