நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் தமிழக எல்லையான மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று நாகூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை வழிமறிக்க கவல்துறையினர் முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை துரத்தி சென்று மடக்கிபிடித்து சோதனை செய்தபோது, ஒரு லட்சம் மதிப்பிலான 1,440 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. மது கடத்தில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரைக்காலில் இருந்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மது கடத்தியது தெரியவந்தது.
இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!