ETV Bharat / state

மயிலாடுதுறையில் எம்ஜிஆருக்கு நினைவு அஞ்சலி - Mayiladuthurai District Tharangambadi

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறையில் எம்.ஜி.ஆருக்கு  நினைவு அஞ்சலி

author img

By

Published : Dec 24, 2020, 3:05 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் அதிமு.கவினரின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தர் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் கலந்துகொண்டு காளஹஸ்திநாதபுரம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று செம்பனார்கோயில் கடை வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் விஜயபாலன், ரெங்கநாதன், முன்னாள் தொகுதி கழக செயலாளர் கபாடி பாண்டியன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 3ஆவது முறையும் ஆட்சி அமைப்போம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.