நாகை மாவட்டத்தில், இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்ச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்லுடன் விளையும் களைகள் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்றது.
இதனால் 40 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் வீரியமுள்ள ரசாயன மருந்துகளை தெளித்து வருகின்றனர். விளைச்சலுக்குப் பின்னர் அதனை சாப்பிடுவதால் உடலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் பயிர்களும் பாதிப்படைகின்றன.
ஆகவே, இயற்கையான முறையில் களைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து குத்தாலம் ஒன்றியம், கண்டமங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய நேரடிப் பயிற்சி அளித்தனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்த மக்கள்!